சிந்தனை செய் மனமே

Saturday, December 8, 2018

கிராமத்துகோவில்

அரசமரத்தான் கோவில், மேலப்பாளையம் கிராமம்., கரூர்.
ஊருக்கு வெளியே...
நெல் வயல்களுக்கு நடுவே...
அரச மரம், வேப்ப மரம் அருகருகே வளர்ந்து இருந்தன.... வயது தெரியாது...அத்தனை பசுமையாய் அடர்ந்து வளர்ந்தவை...
அதை சுற்றி சிறிய பரப்பில் 20 x 20 இருக்கும். ஏதோ பூச்செடிகளும் சிறு சிறு கொடிகளும்.... அப்படியே மேடை போல சற்று உயரமான இடம்...
அம்மரங்களின்  மடியில் ஒய்யாரமாய், இல்லை கர்வத்தோடு
தாய்மடி தஞ்சம் புகுந்த குழந்தைபோல்
தவங்கிடந்த  2 அடி உயரமுள்ள
காவல் சாமிகள் ..
அதைச்சுற்றி நடக்க  நடைபாதை...
அதைச்சுற்றி உயர்ந்த சுற்றுச்சுவர்...
சுவற்றன் மூலைகளில் வீற்றிருக்கும் சிலைகள்....
முன் பக்கம் ஊஞ்சல்...
அதற்கும் முன் நுழை வாயிலில் வேல்கம்புகள்..
சுற்று பாதையில் நடக்கும் போது
பறவைகளின் ரீங்காரம்..அதைக்கேட்பதா?
மெல்லிதாய் வீசினாலும்,  வேகமாய் வீசினாலும் அது என்னவோ அது தான் தென்றல் காற்று...வேறு எங்கும் கிடைக்காது...அதை கேட்பதா?
கம்பீரமாய் நின்ற மரங்களை கண்டு வியப்பதா?

சுவர் மேல் சிலைகள் வண்ணம் பார்ப்பதா?
சற்று கீழே பூக்கள், பூச்சிகள், எறும்புகள் என கணக்கெடுப்பதா?
இத்தனை கவனச்சிதறல் நடுவே சாமி கும்பிடுவது நினைவுக்கு வர சுற்றி முடித்திருப்போம்...!
(எதுவும் இப்போது எதுவும் இல்லை....நவீன முறை கோவில் கட்டுமாணம் நடக்கிறது...)
அரசமரத்தான் கோவில்.

#கிராமத்துகோவில்.

No comments:

Post a Comment

Poems from Tamil Literature: திருக்குறள் - பற்றற்றெம் என்பர்

Poems from Tamil Literature: திருக்குறள் - பற்றற்றெம் என்பர் : திருக்குறள் - பற்றற்றெம் என்பர் செல்வத்தை ஈட்டுவது, சேமிப்பது, செலவழிப்பது என...