WRITTEN for non-tech people and kids.
Please give the information to anyone before start using the smart phones...
Please comment anything hard to understand as layman to technology...that will be simplified!
- ஏன் ஸ்மார்ட் போன் (Smart Phone) என்று கூறுகிறோம் ?
ஸ்மார்ட் ஃபோன் வாங்கியபின்,
· நீங்கள் தனி நபர்
என்றாலும்
· என்னதான் கடினமான
பாஸ்வோர்ட் போட்டிருந்தாலும்
· எப்படி பக்குவமாய்
பயன் படுத்தினாலும்
அது உங்கள் கைப்பொம்மையல்ல!!! (It is not Toy or just a Gaming Device) அது உங்கள் சொத்தாக
(property) இருக்கலாம், ஆனால்
தகவல்கள் (Data) உங்கள் சொத்து அல்ல. ஸ்மார்ட் ஃபோன் மிக்க அறிவுடையது,
பல எஞ்ஜினீயர்கள், மேனேஜர்கள் குழுக்களாக பல மாதங்கள்,
வருடங்கள் உழைத்த பின் விற்பனைக்கு வருவது, பல
தொழில்நுட்பங்கள் (Technical Tasks) சம்பந்தப் பட்ட செயல்களை
அது செய்ய வல்லது. அதை பயன்படுத்துவோர்க்கு அதெல்லாம் தெரிய வேண்டியதில்லை!
அதனால் தான் அதற்கு ஸ்மார்ட் போன் என்று பெயர்!!!
அது நடக்கத் தெரியாத, பேசத் தெரியாத ரோபோ என வைத்துக் கொள்ளலாம்...
- அது எப்படி?
<> நீங்கள் அதைக் கையாளும் தகவலை ஏதோ ஒரு கம்ப்யூட்டருக்கு எப்போதும்
அனுப்பிக் கொண்டிருக்கும் குட்டி கணினி எந்திரம்...குட்டி சாத்தான் போல் எப்போதும்
உங்களுக்கு சேவை செய்ய அது விழித்திருக்கும்…
<> நீங்கள் போனை லாக் செய்து வைத்து இருந்தாலும், அதை
தீயவர் (ஹேக்கர்) நினைத்தால் இயக்க முடியும்...
<> தவறானவர் கையில் போனை சர்வீஸ் செய்யவோ, சரி
பார்த்து தரவோ கொடுத்தால் அவர்கள் ஸ்பை செயலிகளை (spy app) போனில்
தரவிறக்கம் செய்ய முடியும், பின் அவர்கள் அந்த போனை ரிமோட் கன்ட்றோல்
போல் தொலைவில் இருந்து இயக்க முடியும்.
<> ஸ்மார்ட் போன் உங்களுடையதாக இருக்கலாம். ஆனால், அதன்
கேமரா தீயவர் கட்டுப்பாட்டில் சென்று விடும்.... யாரோ ஒருவர் காமராவுடன் உங்களையறியாமல்
வந்து கொண்டிருந்தால்?
- ஸ்மார்ட் போன் என் உடைமை, நான் மட்டுமே அதை கையாள்கிறேன். யாருக்கும் எதுவும் தெரிய வாய்ப்பில்லை. மிக விலையுயர்ந்தது என் ஸ்மார்ட் போன்.
<> நீங்கள் எவ்வளவு விலை கொடுத்து அதை வாங்கியிருந்தாலும், டேட்டா
பிளானில் உங்கள் போனை இணைத்தவுடன், இணையத்துக்குள் இணைந்து விடும்.
<> ஸ்மார்ட் போனில், தனியாக அமர்ந்து நீங்கள் நேரம் செலவழிப்பதாக தோன்றும். ஆனால் உண்மையில் உங்கள் செய்கைகளை கம்ப்யூட்டர்கள்
கண்காணிக்கின்றன – நீங்கள் தனி ஆள் அல்ல... இரகசியம் என்று எதுவும் இல்லை!!!
- ப்ரௌசிங் ஹிஸ்டரி, டேட்டா என்றால் என்ன ?
நீங்கள் பார்த்த/பகிர்ந்த வீடியோக்கள்,
நீங்கள் எடுத்த/பகிர்ந்த போட்டோக்கள்,
நீங்கள் படித்த/பகிர்ந்த இணைய தளங்கள்,
நீங்கள் பகிர்ந்த (மெசேஸ்) கருத்துக்கள் ----
இவை எல்லாமே டேட்டா
இதெல்லாம் சம்பந்தப்
பட்ட கம்ப்யூட்டர் தகவல் மையத்துக்கு (டேட்டா சென்டர்) அனுப்பப் பட்டுக் கொண்டே இருக்கும்...
உ.ம் ஃபேஸ்புக் மெயின் கம்ப்யூட்டர்கள் வேலையே அது தான். போனில் ஒரு வீடியோவை முகநூலில்
பகிர்வீர்கள். பின் (Browsing center) சென்று உங்கள்
முகநூல் அக்கௌண்ட் பார்க்கும் போது எப்போதோ நீங்கள் பகிர்ந்ததை பார்த்து இருப்பீர்கள்.
அது பிரௌசிங் ஹிஸ்டரி என்னும் தொழில்நுட்பம்.
- என் செய்கைகள் பற்றிய தகவல்களால் யாருக்கு என்ன இலாபம்?
<> User history – கஸ்டமர் ப்ரொசிங்
ஹிஸ்டரி எனப்படும் தொகுப்பு, மார்க்கெட்டிங் செய்வதற்கு மிக முக்கியம்.
<> உங்கள் இணைய பார்வைக்கு (browsing history) ஏற்றாற்போல் அவர்கள் விளம்பரங்களை உங்கள் போனுக்கு அனுப்புவார்கள். அவர்களுக்கு
அதில் வருமானம்...இதலெல்லாம் தன்னிச்சையாக இயங்கும் கணினிகள் (Automated Systems) கட்டுப்பாட்டில் நடக்கும் செயல்கள்....தவறான வெப்சைட்டுகளும் விளம்பரங்களாக
வர வாய்ப்புள்ளது. அவை வைரஸ்களை ஸ்மார்ட் போனுக்குள் செயல் படுத்தவும் முடியும். வைரஸ்கள்
கணினியை செயலிழக்கச் செய்ய முடியும். உங்கள் தகவல்களை திருட முடியும்.
- பின் எப்படி தான் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது?
அதற்கு நாமும் ஸ்மார்ட் ஆகிக் கொள்ள வேண்டும்.
-
<> ஸ்மார்ட் போன் காமராவில் ஸ்டிக்கர் சின்னதாக ஒட்டிவிட்டு, போட்டோ
எடுக்கும் போது மட்டும் அதை எடுத்து விட்டு பின் மீண்டும் ஒட்டி வைக்கலாம்
< <> குழந்தைகள் படங்களானாலும், சிறுவர்/சிறுமியர், யாரானும் சரி, தேவையானால் மட்டும் எடுக்கவும். இண்டெர்னெட்டிலும், யூட்யூபிலும் கன்னா பின்னா வென்று பகிரக் கூடாது. யூட்யூபில் ப்ரைவேட் செட்டிங் இருக்கிறது. நீங்கள் லின்க் கொடுத்தால் தான், மற்றவர் பார்க்கமுடியும். யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதி நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்

<> விசாரித்து நகரில் நன்கு தெரியப்பட்ட மொபைல் செண்டர்களில், நம்பிக்கையானவர்களிடம்
சர்வீஸ்/ரிப்பேர் செய்ய கொடுக்கலாம்.
<> பழைய போனை எக்சேஞ்ச் செய்யும் போதும் சரி, தூக்கிப்போடும்போதும் சரி, அதற்கு முன் செய்ய வேண்டியவை:
1. முக்கிய போட்டோ/வீடியோக்களை CD அல்லது பென் டிரைவில் சேமித்து விட்டு , போனில் உள்ளதை அப்படியே டெலிட் செய்து விட வேண்டும், போன் நம்பர்களை குறித்து வைத்து கொள்ள் வேண்டும்.
2. பின், ஃபேக்டரி ரீசெட் -என்று ஆப்சன் இருக்கும்..அதை ஆன் செய்தால் முற்றிலும் டேட்டா அழிந்து விடும்

<> தேவையற்ற/நாகரிகமற்ற வகையில் ஸ்மார்ட் போனை பயன் படுத்தவே கூடாது
உதாரணம்: water theme park, beach - பெண்கள், குழந்தைகள் விளையாடும் போது யாரேனும் வீடியோ/போட்டோ எடுத்தால் விடாதீர்கள். நீங்களும் அப்போது வீடியோ/போட்டோ எடுக்க வேண்டிய அவசியம் இல்லை... ஸ்மார்ட் ஸ்பை-யாக நாம் மாறியாக வேண்டும். சுற்றிலும், கண்காணித்துக் கொண்டு இருக்க வேண்டியது நமது பொறுப்பு.

<> முக்கிய தகவல்களை, அடையாள அட்டைகளின் போட்டோக்களை போனில் வைத்துக்
கொள்ள வேண்டாம்.
-
<> உறவு முறைகள் போன் நம்பரில் தெரிய வேண்டாம். பெயர் மற்றும் எண்
மட்டும் இருத்தல் நன்று
-
<> உங்கள் போட்டோவோ, தகவலோ இரகசியமாக வைத்துக் கொள்வேன் என்று மற்றவர்,
அது யாராக இருந்தாலும் சரி கூறினால் நம்பக்கூடாது.. ஏனெனில் தொழில்நுட்பத்துக்கு
என்றுமே/எங்குமே இரகசியம் இல்லை. யார் “சரியான கட்டளையை” அனுப்பினாலும்
அது தன் வேலை செவ்வனே செய்யும் குட்டி (ரோபோ) சாத்தான். அதற்கு யார் உண்மையான உரிமையாளர்
என்று தெரியாது. தனக்கு வரும் கட்டளைகள் (Orders from your finger touches
on touch pad) என்ன சொல்கிறதோ அதை அப்படியே செய்யும். இதை புரிந்து கொண்டால்
போதும்.
-
<> (Spy apps) ஸ்பை செயலிகள் “விரல் தொடுகைகளால்”
அனுப்பும் கட்டளைகளை போல் மாதிரி கட்டளைகளை உங்கள் போன் அதன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்
போது அனுப்பி, உங்கள் போனை, உங்களுக்கு
தெரியாமல் இயக்க முடியும். உ.ம்: உங்கள் போன் கேமராவை ஆன் செய்து, உங்களை வீடியோ எடுத்துக் கொள்ளவும் முடியும்...
- சூப்பர் ஸ்மார்ட்டா எப்படி பயன் படுத்தலாம்?
-
<> தேவையற்ற நேரங்களில் டேட்டா பிளானை நிறுத்தி வைக்கலாம். அதாவது
இணையத் தொடர்பைத் துண்டித்து வைக்க வேண்டும். ஏனெனில் எப்போதும் இணையம் ஏதோ ஒரு தகவலை, இணைக்கப்
பட்ட மெசின்களுடன் (Computers, laptops, smart phones with internet
connection) பரிமாறிக்கொண்டு இணைப்பில் இருக்கும்.
-
<> தேவையான துறையில் உங்கள் வளர்ச்சிக்கும், திறமைகளை
வளர்த்துக் கொள்ளவும் மட்டுமே (டேட்டா ப்ளான்) இணையத் தொடர்பை பயன்படுத்துவேன் என்று முழுமையாக உணர்ந்து கொண்டு
வீடியோக்கள், இணையத்தளங்கள், மெசேஜ் பக்கம்
செல்லலாம்.
-
<> அவசர காலங்களில் (Emergency) எப்படி முக்கியமானவர்களை தொடர்பு
கொள்வது, அவர்களுக்கு தகவல்களை எப்படி அனுப்புவது என்பது பற்றித்
தெரிந்து கொள்ளலாம்
-
<> குழந்தைகளிடம் ஸ்மார்ட் போன் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
அது வெறும் பொழுது போக்கு சாதனம் அல்ல, அது நடக்காத, பேசாத குட்டி
ரோபோ. பெரியவர்களிடம் கேட்டு தான் புதிய செயலிகளோ (Apps),
வீடியோக்களோ பார்க்க வேண்டும் என்று அவர்களுக்கு புரியும்படி எச்சரிக்கலாம்.
-
<> ஸ்மார்ட் போன் தொடவே கூடாது என்று சொல்லி பயப்படுத்தாமல், கட்டுப்படுத்தாமல்
ஸ்மார்ட் போன் நம்மையெல்லாம் விட ரொம்ப ரொம்ப ஸ்மார்ட், அதை ஜாக்கிரதையாக
பயன் படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கலாம்...
-
<> ஸ்மார்ட் போன் கையில் இருக்கும் போது, நாம்
சமூக வலைதளங்களில் (Social networks) இருப்பதும் சகஜம். சமூக
வலைத்தளம் என்பது உலகின் பல்வேறு தரப்பட்ட மக்களின் (virtual world – you are
very close to some one in other part of the world) நேரடி மெய்நிகர்
உலகம். அதாவது, நாம் உண்மையில் தொலைவில் தான் இருப்போம்,
ஆனால் தொலைவில் இருப்பவருடன் உடனுக்குடன் தொடர்பில் இருப்பது போல் நம்புவோம்,
நம்மையும் அறியாமல்....அதற்கு அடிமையாகி விடக் கூடாது... அதிலே ஆபத்துத் தான் அதிகம் !!!
<> என்ன இனிமையாக பேசினாலும், என்ன தேவையோ அதை மட்டுமே பேசக் கூடிய அளவு தான் நட்பு இருக்க வேண்டும்.. ஏனெனில், இணையத்தில் ஒருவர் போல் இன்னொருவர் போல் நடிக்க வாய்ப்புள்ளது, (Impersonate என்று பெயர்) ...அவர்கள் தம் உண்மை அடையாளத்தை மறைக்க முடியும். பொய்யான பெயரை, தகவலை தர முடியும் (FAKE ID, FAKE user account)..
<> உங்கள் நெடுங்கால நட்புகளிடமோ, பெற்றவரிடமோ சொல்லக் கூடாத விசயங்களை "இணைய நண்பர்" பேசினால், அங்கே எச்சரிக்கை மணி அடிக்கிறது என்று பொருள்!!!! பேச்சை தொடர்ந்தால் ஆபத்து ஆரம்பம்!!! பதில் அனுப்பவே அனுப்பாதீர்கள்....நீங்கள் உடனே வெளியே சொல்ல வேண்டும்......பொறுக்கிகள் என்று ஸ்மார்ட்டாக தெரிந்து கொள்ள வேண்டும்...

<> எப்போதும் நீங்கள் தனி ஆள் அல்ல... நெட்வொர்க் என்று சொல்லப்
படும் வலைக்குள் (Internet Networking) நம் செய்கைகள் (User Activities) ஏற்கனவே வரையறுக்க பட்டுள்ளது. அதில் நாம் இணையும் போது (டேட்டா ப்ளான் எடுக்கும் போது), எப்போதும் நம்மைச் சுற்றி மிகப் பெரிய சமுதாயம் இருக்கிறது, அதில் தான் நாம் இணைந்துள்ளோம் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டால் போதும் சமூக
பொறுப்பும் (Social Responsibility), நாகரிகமும் (Decency) அதில் எவ்வளவு முக்கியம் என்பது தெரியும்
எவ்வளவோ கடினப் பட்டு தான் தொழில்நுட்பங்களை உருவாக்குகிறார்கள்.
நாம் கொஞ்சம் கடினப்பட்டு அதை புரிந்து கொள்ளலாமே!!!!
ஸ்மார்ட் ஆக குறுக்கு வழி இல்லை!!!!
மேலும் கேள்விகள் இருந்தால், பின்னூட்டம் இடவும்.
Handle with Responsibility!
Handle knowing that it is a device!
#awarenessPost
LEARN before BUYING any technology!!!
TEACH before GIVING technology to kids!!!
No comments:
Post a Comment