சிந்தனை செய் மனமே

Tuesday, March 12, 2019

பெண்கள் தினம் எதற்கு?



பெண்கள் தினம் எதற்கு?
பொறுக்கிகள், தினம் தினம் கொண்டாடும் போது...
துரோகிகள், தினம் தினம் கொண்டாடும் போது....

ஒருவன் போட்டியில் வெற்றிப் பொருளாய் ஒரு பெண்ணை மணந்தானாம்.
தாய் என்ன, ஏது என்று அறியாமலே, உடன் பிறந்தவரோடு பரிசை பகிர்ந்து கொள்ள சொன்னாளாம்.
தாய் சொல்லை தட்டாத தர்மவான்களாம். அப்படியே முட்டாள்தனமாக பின்பற்றுவார்களாம்...எதிலேடா தர்மம் ?? உண்மையில் எந்த தாயும் இதைக் கண்டு பொறுப்பாளா?

அப்பெண்ணை சூதாட்டத்தில் வைத்து விளையாடுவானுங்களாம்...உண்மையில் இதைச் செய்பவனை ஹீரோவாய் பார்ப்போமா ?
அதுவும், பரமாத்மா முன்னாலே....
பரமாத்மாவும் விதிகளுக்குட்பட்டு, கைகள் கட்டப் பட்டு தவிப்பாராம்....உண்மையிலே நாயகனாக ஏற்போமா ?

அவள், பரமாத்மாவை கூப்பிட்டு "உதவி" என்று கதறும் வரை
பரமாத்மா ஒன்னும் செய்ய மாட்டானாம்....அவ்ளோ ஈகோவாம்  !!!

அவள் துகிலைத் தொட வரும் போதெல்லாம், அவன் கையை நீ எரித்து இருந்தால், நீ உண்மையிலே கடவுள்...

 அவள் கூடியிருந்த ஒவ்வொருவரிடமும் கேட்டு, கெஞ்சி கூக்குரலிடும் போது கடவுளே ஒன்றும் செய்யவில்லை..... இன்று முகநூலில் பதிவிடுவோர் நிலையும் அதே கையறு நிலை!!! முகநூல் கடவுள்கள்!!!


அநீதி நடக்கும் போது தட்டிக் கேட்காத, தடுக்காத நீதி
பல வருடங்கள் கழித்து எல்லாத்தையும் கிழித்து, உபதேசம் செய்து என்ன பயன்?
அவனுங்க அப்படித்தான்...


இந்த கேள்வியாலே ஒருநாளும்  அவனை கடவுளாக எண்ணி கையெடுத்து கும்பிடத் தோன்றுவதில்லை....


கட்டுக்கதைகளிலேயே காவல் இல்லை....
இப்படிப்பட்ட கதைகளியே அங்கீகரித்தோம், ஆண்களுக்கு தேவையான படியே எல்லாம் இருக்க விட்டோம்.

இனி என்ன செய்வது?

நம் மகன்களே இந்த கதையின் அநீதியைக் கேள்விக் கேட்க வேண்டும்..கண்டிப்பாக கேட்பார்கள்...இதை மகன்களுக்கு சொல்லி தர வேண்டியது, தாயாகும் ஒவ்வொரு பெண்ணின் கடமையாகும்...



பெண்களுக்கும், பேரறிவாளன்களுக்கும் மட்டும் நீதி தேவதை என்னமோ பேய்பிசாசுகளை விட மோசமாகவே, கேவலமாகவுமே நடந்து கொள்கிறது சாதி, மதம், இனம் பார்க்காமல்....


"கண்ணகி சிலை தான் இங்குண்டு, சீதைக்கு கல்லால் சிலை ஏது?
புரட்சிகள் ஏதும் செய்யாமல், பெண்ணுக்கு நன்மை விளையாது..."
  ---ஒரு மசாலா திரைப்பாடலில், மற்ற வரிகளோடு கலந்து தான் சொல்ல வேண்டி இருக்கு... நாம தான் புரிஞ்சிக்கனும்...

No comments:

Post a Comment

Poems from Tamil Literature: திருக்குறள் - பற்றற்றெம் என்பர்

Poems from Tamil Literature: திருக்குறள் - பற்றற்றெம் என்பர் : திருக்குறள் - பற்றற்றெம் என்பர் செல்வத்தை ஈட்டுவது, சேமிப்பது, செலவழிப்பது என...