உனக்கான புதிய பாரதத்தை
பெண்ணே
நீ தான் எழுத வேண்டும்!
இதிகாசங்களையும் வேதங்களையும்
திருத்தி எழுத வேண்டியது,
உன்
தலையாய கடைமையடி!
உனக்குத்தான்
முதல் உரிமை உண்டடி!!
நீ எழுதும் இதிகாசத்தில்
பரம்பொருளின் தர்மத்தை நீயே எழுது....
அதை
ஆண் பிள்ளையும் படிக்க வேண்டும்,
பெண் பிள்ளையும் படிக்க வேண்டும்!!!
திரௌபதியே...தேவதையே....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தான் விரும்பி
கரம் பிடித்து வந்தவனின்
தமயன்களை
தாமதமின்றி
தாயாய் மாறி
தத்தெடுத்து விடு!!!
பின்,
உன்னை "பரிசாய் வென்றேன்"
என்று சொல்பவனை
"பெண்ணை" திருமணம் செய்தேன் அம்மா, என்று சொல்ல வை!!!
ஒரு பெண்ணை வைத்து
இன்னொரு பெண்ணிற்கு
இழைக்கப் படும் கொடூரத்தைத் தகர்த்தெறி!!!
கடும் தவம் இயற்றினாய் அல்லவா?
தவறான நோக்கில்
நேருக்கு நேர் பார்ப்பவன்
தீயாய் பற்றி சாகும் வரம் பெறு!!!
அதானல்
பின்னாலிருந்து சூதாட அழைப்பான்!
சூழ்ச்சிக் களத்திற்கு
கொல்லிக்கட்டையுடன் செல்!!!
கயவன்
உன்
துகிலை தொட
கரம் நீளும் போதெல்லாம்
பரம்பொருள் அவன் கையை எரிக்க வேண்டும்....
சூதாட்ட தர்மம் காத்து
நீ கூக்குரலிட்டு
கூப்பிடும்வரை
கல்லாயிருத்தல் கூடாது
நீ வடிக்கும் பரம்பொருள்...!!!
துகிலுரிய வைக்கும் எண்ணத்தைக் கூட
துரியோதணனுக்கும்,
கூடியிருந்தோருக்கும்
தரக் கூடாது...
பின், காட்சிகளை போர் வரை
கொண்டு செல்...
எங்கும் சுயமரியதையை விடாதே!!!
நெருப்பை விடாதே!!
இதை நாடகமாய் அரங்கிலேற்றடி....
இனிமேல்
ஒரு பெண் கதறுவதைக் கண்டு
அனுபவிக்க
கூட்டத்தில்
காத்து இருக்கும் பொறுக்கிகள்
வெந்து சாகட்டும்...!!!!
பெண்ணே,
எழுது
புதிய பாரதம்!!!
உண்மையான இந்து எனில்
உனக்கு இல்லாத
உரிமை வேறு
யாருக்கடி உள்ளது....!!!
நீ தான்
விதிகளையும்
வேதங்களையும்
இதிகாசங்களையும்
திருத்தி எழுத வேண்டும்....
நீ சார்ந்த மதத்தில்
அதற்கு எவரிடம்
அதற்கு அனுமதி பெற
தேவையில்லையடி!!!
இறைவன் முன்
அனைவரும் சமம் என்றால்
பெண்ணே,
எழுது
புதிய பாரதம்!!!
No comments:
Post a Comment