சிந்தனை செய் மனமே

Tuesday, November 6, 2018

சிந்தனை தேரில் ஏறியே...(Introversion)

உள்நோக்கிய சிந்தனை....
உள்ளே ஒன்று, வெளியே வேறு அல்ல..!
உள்ளே நிறைய சிந்தனைகளின் வடிவத்தில், வார்த்தை வடிவெடுத்து வெளியேறாமல்....
They gain energy from their style of thinking.
They need the thoughts as fuel and keep the thinking as style. So they have plenty to talk , but not being talkative.

தமிழில் சரியான வார்த்தை உள்ளதா ? கூகுள் அகமுகமாக, உள்நோக்கிய என்று சொல்கிறது...

ஆனால், அழகிய தமிழ் வார்த்தை சிந்தனையாளர் என்று உள்ளது.. ஆனால் அது அவர்களுக்கே தெரிவதில்லை.. என்னேரமும் ஒரு யோசனையில், ஆழமான சிந்தனையில் இருப்பவர்கள் தாம் சிந்தனையாளர் என்பதை அறியாமல் இருக்கிறார்கள்...

யாரேனும் சிந்தனை கிணற்றில் சிக்கி இருக்கிறீரார்களா? எப்படி கண்டுபிடிப்பது?

சிந்தனை வயப்பட்டவர்கள், நீங்கள் கடந்து செல்லும் போது அவர்கள் உங்களை கவனித்து இருக்க மாட்டார்கள், கேட்ட கேள்விகளுக்கு குறைவான அளவு பதிலை மட்டும் சொல்லு விட்டு கடந்து செல்வார்கள், அவர்களுக்குள் நிகழும் சிந்தனைகளின் போராட்டத்தை உணர்ந்து கொள்ளும் வரை...அவர்கள் தம் சிந்தனைகளை பாதுகாத்து வைத்து வைக்கவே விரும்புவதால் தம் வேலை, வீடு என அன்றாட வேலைகளுக்கு நடுவே சிந்திக்கவும் நேரம் ஒதுக்க விரும்புவதால் அதற்காக கிடைக்கும் தனிமை நேரத்தை செலவிடுவார்கள்.

அவர்கள் பேசினால், முக்கிய விசயங்களை பற்றியே தீவிரமாக பேசுவார்கள். இயற்கையை, கடலை, கடற்கரையை, விலங்குகளை, பறவைகளை கண்டு வியப்பார்கள், வரலாற்றை பின்நோக்கி பார்ப்பவர்களாக, கால எந்திரத்தில் ஏறி முன்னோக்கி எதிர் காலத்தை பற்றி சிந்திப்பவர்களாக இருப்பார்கள்.

இதில் என்ன சிக்கல் என்றால், அவர்கள் தம் பிரச்சினைகள் குறித்தும் சிந்தித்துக் கொண்டிருப்பது...தகுந்த நேரத்தில் தம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்... உதவி கேட்பது, யோசனை கேட்பது என்பது நம்மையும் மற்றவர்க்கு உதவ தயாரக்குகிறது...

ஏதேனும் ஒரு வழியில் தம் சிந்தனைகளை  அவர்கள் யாருடனேனும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
எழுதும் திறனோ, ஓவியமோ, ஏதேனும் ஒரு கலை வடிவிலோ தம் சிந்தனைகளை பாதுகாக்கத் தெரிந்து கொண்டார்களெனில் அவர்கள் மற்றவர்களோடு கலந்துரையாட தயாராகி விடுவார்கள்...

இந்த பாடலை கேட்கும் போது சிந்தனையாளர்களின் உள் உலகம் எப்படி இந்த உலகைப் பார்க்கிறது என்பதை அறியலாம்...


இளநெஞ்சே வா தென்றல் தேரில் எங்கும் போய் வரலாம்...


http://cinemapadalkal.blogspot.com/2007_07_11_archive.html - அழகாக தமிழில் கொடுத்துள்ளார்கள்...

https://www.youtube.com/watch?v=0UvdnYlamto


சிந்தனை கிணறு என்று குறுகிய வட்டத்தில் போகாமல், சிந்தனை தேரில் ஏறியே, சுற்றி வந்து பார்த்ததை, சிந்தித்ததை, படித்ததை, பிடித்ததை, இரசித்ததை
உங்களுக்கு பிடித்த வழியில் பகிர்ந்து கொள்ளுங்கள்....



References:
https://www.verywellmind.com/signs-you-are-an-introvert-2795427
https://www.amazon.com/Introvert-Power-Inner-Hidden-Strength/dp/1402280882





No comments:

Post a Comment

Poems from Tamil Literature: திருக்குறள் - பற்றற்றெம் என்பர்

Poems from Tamil Literature: திருக்குறள் - பற்றற்றெம் என்பர் : திருக்குறள் - பற்றற்றெம் என்பர் செல்வத்தை ஈட்டுவது, சேமிப்பது, செலவழிப்பது என...