சிந்தனை செய் மனமே

Tuesday, November 6, 2018

நல்லா படிக்கனும்

நல்லா படிக்கனும் .... என்றால் என்ன?


கற்க கசடற... இதை கர்ம சிரத்தையாக பின்பற்றுவது எப்படி?


படிப்பது என்பது பற்றி பெற்றோர்கள் முதலில் உணர வேண்டியது அவசியம். கற்றல் என்பது குழந்தைகளின் தனிப்பட்ட விசயம் அல்ல.
ஒரு பாடம் எப்படி சொல்லித் தரப்படுகிறது?
ஒரு பாடத்தை கவனிக்கும் போது எழும் சந்தேகங்கள் எப்படி சொல்லப் படுகிறது.
சந்தேகம் அல்லது புரியாத பாடத்தின் பகுதியை எப்படி அணுக அந்த குழந்தைக்கு சொல்லித் தருகிறோம்.

எந்த ஒரு குழந்தையும் எந்த பாடத்திலும் தோல்வியடை விரும்புவதில்லை. எனில், குறைந்த மதிப்பெண் வாங்குகிற குழந்தையிடம் பொதுவாக நாம் என்ன சொல்கிறோம்...?
ட்யூசன் அனுப்புகிறோம். கோச்சிங் / பயிற்சி போதவில்லை என்று மேலும் பயிற்சி வகுப்புகளில் சேர்க்கிறோம்...
கனிவாக சொல்வது என்றால்,
இனிமேல், நல்லா படிக்கனும் சரியா? நல்லா படித்தால் இது வாங்கித் தருகிறேன், அது வாங்கித் தருகிறேன்...
கடினமாக சொல்வது என்றால்,
அதட்டல், மிரட்டல், உனக்கு அது கிடையாது, இது கிடையாது...


ஆனால், அந்த பாடத்தில் என்ன புரியவில்லை? தயக்கமின்றி என்ன சந்தேகம் வேண்டும் என்றாலும் கேள். மிகச்சிறிய விளக்கமோ, நீண்ட விளக்கமோ கேள்வியைக் கேள்.. என்று சொல்வதில்லை...

பல கணித ஆசிரியர்கள் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.. ஏனெனில் கலந்துரையாடாமல் ஒரு கணக்குக்கு தீர்வு காண முடியாது...
கலந்துரையாடாமல் எந்த ஒரு பாடத்தையும் படிக்க முடியாது...

நல்லா படிக்கனும் .. என்றால் அந்த பாடத்தை பற்றி கலந்துரையாட வேண்டும், விவாதிக்க வேண்டும்... சிறு சிறு சந்தேகங்களையும் விவாதித்து கலந்துரையாடி தீர்த்துக் கொள்ள வேண்டும்...

மதிப்பெண்கள் ஒரு பாடத்தில் எழுப்பப் படும் கேள்விகளைக் கொண்டு கொடுக்கப் படலாம்...

கேள்விக் கேட்கும் போது தான் அந்த பாடத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் வளரும்..

அதற்கு பிறகு, படிப்பது என்பது சுலபமாகி விடுகிறது....




No comments:

Post a Comment

Poems from Tamil Literature: திருக்குறள் - பற்றற்றெம் என்பர்

Poems from Tamil Literature: திருக்குறள் - பற்றற்றெம் என்பர் : திருக்குறள் - பற்றற்றெம் என்பர் செல்வத்தை ஈட்டுவது, சேமிப்பது, செலவழிப்பது என...