சிந்தனை செய் மனமே

Saturday, December 8, 2018

கிராமத்துகோவில்

அரசமரத்தான் கோவில், மேலப்பாளையம் கிராமம்., கரூர்.
ஊருக்கு வெளியே...
நெல் வயல்களுக்கு நடுவே...
அரச மரம், வேப்ப மரம் அருகருகே வளர்ந்து இருந்தன.... வயது தெரியாது...அத்தனை பசுமையாய் அடர்ந்து வளர்ந்தவை...
அதை சுற்றி சிறிய பரப்பில் 20 x 20 இருக்கும். ஏதோ பூச்செடிகளும் சிறு சிறு கொடிகளும்.... அப்படியே மேடை போல சற்று உயரமான இடம்...
அம்மரங்களின்  மடியில் ஒய்யாரமாய், இல்லை கர்வத்தோடு
தாய்மடி தஞ்சம் புகுந்த குழந்தைபோல்
தவங்கிடந்த  2 அடி உயரமுள்ள
காவல் சாமிகள் ..
அதைச்சுற்றி நடக்க  நடைபாதை...
அதைச்சுற்றி உயர்ந்த சுற்றுச்சுவர்...
சுவற்றன் மூலைகளில் வீற்றிருக்கும் சிலைகள்....
முன் பக்கம் ஊஞ்சல்...
அதற்கும் முன் நுழை வாயிலில் வேல்கம்புகள்..
சுற்று பாதையில் நடக்கும் போது
பறவைகளின் ரீங்காரம்..அதைக்கேட்பதா?
மெல்லிதாய் வீசினாலும்,  வேகமாய் வீசினாலும் அது என்னவோ அது தான் தென்றல் காற்று...வேறு எங்கும் கிடைக்காது...அதை கேட்பதா?
கம்பீரமாய் நின்ற மரங்களை கண்டு வியப்பதா?

சுவர் மேல் சிலைகள் வண்ணம் பார்ப்பதா?
சற்று கீழே பூக்கள், பூச்சிகள், எறும்புகள் என கணக்கெடுப்பதா?
இத்தனை கவனச்சிதறல் நடுவே சாமி கும்பிடுவது நினைவுக்கு வர சுற்றி முடித்திருப்போம்...!
(எதுவும் இப்போது எதுவும் இல்லை....நவீன முறை கோவில் கட்டுமாணம் நடக்கிறது...)
அரசமரத்தான் கோவில்.

#கிராமத்துகோவில்.

Friday, December 7, 2018

Deep Thinking - blame it on the brain cells


What is Deep Thinking ? 
how long it takes you think ?
Why are you thinking so?


When you read something, you just, just read....reading takes only few seconds or minutes, but questions are just popping up in your mind within that few seconds or minutes.....

 you have no control of it

and if you have enough time, you will find answers... or someone who has answers can give them...







Why did not Nethaji come back after Independence.
What did he benefit? What happened to him.
How hard it would be to form INA and train against Rulers.
How much efforts and co ordination .
What was their standpoint in World War 2.
Other questions ?
Many more questions would be there... who knows...

Thursday, December 6, 2018

காலத்தில் கேட்கப்படும் உதவி

Know when to stop struggling and ask for help.

Asking for Help is an important skill.
It makes life easier.
The problem might be already solved by someone else in the community very well. 
It will show the real caring people and identify the not-caring people. This will save lots of energy for the future challenges. 
This experience will increase the confidence level, one day you will be ready to help others in need. 

So, Do not hesitate to ask for help!
Do not get stuck within the problem forever. Come out of it!

Common Sense as Individuals

Self-awareness


உன்னையறிந்தால்....Know your Own style

Know your working style.
Know the patterns in your working style.

Know when to break the pattern in unpredicted life and world.

செய்திகள்

about the news craps

Tuesday, November 20, 2018

உன்னையறிந்தால்...Know what you have in your heart



for self analysis,
முகநூலில் படித்த கதை:
முன்பு ஜெர்மனி நாடு பிளவுபட்டிருந்தபோது பெர்லின் நகரத்தை கிழக்காகவும் மேற்காகவும் பெரிய மதில் சுவர் பிரித்தது.
ஒருநாள் கிழக்கு பெர்லினை சேர்ந்த சிலர், ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டுவந்து மதில் தாண்டி மேற்கு பெர்லின் பக்கம் கொட்டினார்கள்...அவ்வளவு குரோதம்...! 😩
மேற்கு பெர்லினை சேர்ந்த மக்களும் அதே மாதிரி செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. மாறாக ஒரு லாரி நிறைய உணவு பொருட்கள், ரொட்டிகள், பால் பொருட்கள் மற்றும் மளிகை சாமான்களை கொண்டுவந்து மதில் தாண்டி இந்த கிழக்கு பெர்லின் பக்கம் அழகாக அடுக்கி வைத்துவிட்டு போனார்கள்.
மேலும் அதன் மீது இவ்வாறு எழுதி வைத்து விட்டு போனார்கள் :
"ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள்"
"EACH GIVES WHAT HE HAS"..😍
எவ்வளவு நிதர்சனமான உண்மை....! உங்களிடம் இருப்பதைதான் உங்களால் கொடுக்க முடியும்.
உங்களுக்கு 'உள்ளே' என்ன இருக்கிறது...?
💬அன்பா - பகையா...?
💬அமைதியா - வன்முறையா...?
💬வாழ்வா - சாவா...?
💬உங்கள் திறமை, பலம் அழிவுப்பாதையை நோக்கியா - வளர்ச்சிப்பாதையை நோக்கியா...?
இத்தனை காலங்களில் நீங்கள் அடைந்தது என்ன..?
"ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பர்

more to come....

உதவி கேட்டலின் மகத்துவம் - Ask to Offer



When you are BRAVE to ask others for genuine help no matter what the outcome is, including few humiliating, few offering, few disrespecting,
it is that bravery that awakens the hidden kindness in yourself
And that is when,
You decide to help others in need once you get back up at any cost, and you will make it for sure !!!
Only the strongest/bravest can be kind.

எப்படி, ஏன், எதற்கு, என்ன, எத்தனை, யாரிடம், யார், எங்கு -- கேள்வி வாக்கியங்கள் எல்லாம் மற்றவரை சார்ந்து, மற்றவர்களோடு சேர்ந்து வாழும் சமுதாய வாழ்க்கைக்காகவே...

நீங்கள் உதவி கேட்பதையோ, பெறுவதையோ தயக்கமாகவும், சங்கடமாகவும் எண்ணினால், எப்படி அதே உதவி தேவைப்படும் இன்னொருவருக்கு உதவ முடியும்?

ஒருத்தருக்கொருத்தர் உதவி செய்து வாழ்வதே சமுதாய வாழ்க்கை...
தனிமரம் தோப்பாகாது என்ற பழமொழி தாவரங்களுக்கு மட்டுமல்ல நமக்கும் தான்...

உங்களுக்குத் தேவைப்படும் உதவியை கேட்க ஆரம்பிக்கும் தருணமே உங்கள் வாழ்க்கைக்கான நல்ல நேரத்தின் துவக்கம்.

இராசி பலனில் உங்கள் ராசிக்கு சொல்வது அல்ல....

கேலி செய்வோர், கண்டு கொள்ளாமல் போவோர், மறுத்து விடுவோர், மறந்து விடுவோர், ஏமாற்றி விடுவோர், உண்மையிலே உதவி செய்வோர், உதவி செய்யும் எண்ணம் இருந்தும் செய்ய முடியாத சூழல் உள்ளோர், வார்த்தைகளால் வழி காட்டுவோர், உதவி செய்யக்கூடியவரை அடையாளம் காட்டுவோர்.... என பல வகைப் பட்ட மனிதர்களின் குணங்களை தெரிந்து கொள்வீர்கள்...

ஏன் இதெல்லாம் தெரிந்து கொள்வதால் என்ன பலன்?

நீங்கள் எப்படி பட்டவராக வேண்டும் என்பதை உணர்வீர்கள்...இத்தனை குணாதிசயங்களும் நிரம்பி வழியும் இச்சமுதாயத்தில் தான் வாழப் போகிறோம்...




Tuesday, November 6, 2018

சிந்தனை தேரில் ஏறியே...(Introversion)

உள்நோக்கிய சிந்தனை....
உள்ளே ஒன்று, வெளியே வேறு அல்ல..!
உள்ளே நிறைய சிந்தனைகளின் வடிவத்தில், வார்த்தை வடிவெடுத்து வெளியேறாமல்....
They gain energy from their style of thinking.
They need the thoughts as fuel and keep the thinking as style. So they have plenty to talk , but not being talkative.

தமிழில் சரியான வார்த்தை உள்ளதா ? கூகுள் அகமுகமாக, உள்நோக்கிய என்று சொல்கிறது...

ஆனால், அழகிய தமிழ் வார்த்தை சிந்தனையாளர் என்று உள்ளது.. ஆனால் அது அவர்களுக்கே தெரிவதில்லை.. என்னேரமும் ஒரு யோசனையில், ஆழமான சிந்தனையில் இருப்பவர்கள் தாம் சிந்தனையாளர் என்பதை அறியாமல் இருக்கிறார்கள்...

யாரேனும் சிந்தனை கிணற்றில் சிக்கி இருக்கிறீரார்களா? எப்படி கண்டுபிடிப்பது?

சிந்தனை வயப்பட்டவர்கள், நீங்கள் கடந்து செல்லும் போது அவர்கள் உங்களை கவனித்து இருக்க மாட்டார்கள், கேட்ட கேள்விகளுக்கு குறைவான அளவு பதிலை மட்டும் சொல்லு விட்டு கடந்து செல்வார்கள், அவர்களுக்குள் நிகழும் சிந்தனைகளின் போராட்டத்தை உணர்ந்து கொள்ளும் வரை...அவர்கள் தம் சிந்தனைகளை பாதுகாத்து வைத்து வைக்கவே விரும்புவதால் தம் வேலை, வீடு என அன்றாட வேலைகளுக்கு நடுவே சிந்திக்கவும் நேரம் ஒதுக்க விரும்புவதால் அதற்காக கிடைக்கும் தனிமை நேரத்தை செலவிடுவார்கள்.

அவர்கள் பேசினால், முக்கிய விசயங்களை பற்றியே தீவிரமாக பேசுவார்கள். இயற்கையை, கடலை, கடற்கரையை, விலங்குகளை, பறவைகளை கண்டு வியப்பார்கள், வரலாற்றை பின்நோக்கி பார்ப்பவர்களாக, கால எந்திரத்தில் ஏறி முன்னோக்கி எதிர் காலத்தை பற்றி சிந்திப்பவர்களாக இருப்பார்கள்.

இதில் என்ன சிக்கல் என்றால், அவர்கள் தம் பிரச்சினைகள் குறித்தும் சிந்தித்துக் கொண்டிருப்பது...தகுந்த நேரத்தில் தம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்... உதவி கேட்பது, யோசனை கேட்பது என்பது நம்மையும் மற்றவர்க்கு உதவ தயாரக்குகிறது...

ஏதேனும் ஒரு வழியில் தம் சிந்தனைகளை  அவர்கள் யாருடனேனும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
எழுதும் திறனோ, ஓவியமோ, ஏதேனும் ஒரு கலை வடிவிலோ தம் சிந்தனைகளை பாதுகாக்கத் தெரிந்து கொண்டார்களெனில் அவர்கள் மற்றவர்களோடு கலந்துரையாட தயாராகி விடுவார்கள்...

இந்த பாடலை கேட்கும் போது சிந்தனையாளர்களின் உள் உலகம் எப்படி இந்த உலகைப் பார்க்கிறது என்பதை அறியலாம்...


இளநெஞ்சே வா தென்றல் தேரில் எங்கும் போய் வரலாம்...


http://cinemapadalkal.blogspot.com/2007_07_11_archive.html - அழகாக தமிழில் கொடுத்துள்ளார்கள்...

https://www.youtube.com/watch?v=0UvdnYlamto


சிந்தனை கிணறு என்று குறுகிய வட்டத்தில் போகாமல், சிந்தனை தேரில் ஏறியே, சுற்றி வந்து பார்த்ததை, சிந்தித்ததை, படித்ததை, பிடித்ததை, இரசித்ததை
உங்களுக்கு பிடித்த வழியில் பகிர்ந்து கொள்ளுங்கள்....



References:
https://www.verywellmind.com/signs-you-are-an-introvert-2795427
https://www.amazon.com/Introvert-Power-Inner-Hidden-Strength/dp/1402280882





நல்லா படிக்கனும்

நல்லா படிக்கனும் .... என்றால் என்ன?


கற்க கசடற... இதை கர்ம சிரத்தையாக பின்பற்றுவது எப்படி?


படிப்பது என்பது பற்றி பெற்றோர்கள் முதலில் உணர வேண்டியது அவசியம். கற்றல் என்பது குழந்தைகளின் தனிப்பட்ட விசயம் அல்ல.
ஒரு பாடம் எப்படி சொல்லித் தரப்படுகிறது?
ஒரு பாடத்தை கவனிக்கும் போது எழும் சந்தேகங்கள் எப்படி சொல்லப் படுகிறது.
சந்தேகம் அல்லது புரியாத பாடத்தின் பகுதியை எப்படி அணுக அந்த குழந்தைக்கு சொல்லித் தருகிறோம்.

எந்த ஒரு குழந்தையும் எந்த பாடத்திலும் தோல்வியடை விரும்புவதில்லை. எனில், குறைந்த மதிப்பெண் வாங்குகிற குழந்தையிடம் பொதுவாக நாம் என்ன சொல்கிறோம்...?
ட்யூசன் அனுப்புகிறோம். கோச்சிங் / பயிற்சி போதவில்லை என்று மேலும் பயிற்சி வகுப்புகளில் சேர்க்கிறோம்...
கனிவாக சொல்வது என்றால்,
இனிமேல், நல்லா படிக்கனும் சரியா? நல்லா படித்தால் இது வாங்கித் தருகிறேன், அது வாங்கித் தருகிறேன்...
கடினமாக சொல்வது என்றால்,
அதட்டல், மிரட்டல், உனக்கு அது கிடையாது, இது கிடையாது...


ஆனால், அந்த பாடத்தில் என்ன புரியவில்லை? தயக்கமின்றி என்ன சந்தேகம் வேண்டும் என்றாலும் கேள். மிகச்சிறிய விளக்கமோ, நீண்ட விளக்கமோ கேள்வியைக் கேள்.. என்று சொல்வதில்லை...

பல கணித ஆசிரியர்கள் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.. ஏனெனில் கலந்துரையாடாமல் ஒரு கணக்குக்கு தீர்வு காண முடியாது...
கலந்துரையாடாமல் எந்த ஒரு பாடத்தையும் படிக்க முடியாது...

நல்லா படிக்கனும் .. என்றால் அந்த பாடத்தை பற்றி கலந்துரையாட வேண்டும், விவாதிக்க வேண்டும்... சிறு சிறு சந்தேகங்களையும் விவாதித்து கலந்துரையாடி தீர்த்துக் கொள்ள வேண்டும்...

மதிப்பெண்கள் ஒரு பாடத்தில் எழுப்பப் படும் கேள்விகளைக் கொண்டு கொடுக்கப் படலாம்...

கேள்விக் கேட்கும் போது தான் அந்த பாடத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் வளரும்..

அதற்கு பிறகு, படிப்பது என்பது சுலபமாகி விடுகிறது....




Monday, November 5, 2018

தோல்வி நம் நண்பன் முஸ்தபா....


தோல்விகளைப் பற்றிய ஆராய்ச்சி...



தோல்விகளை மதிக்கத் தொடங்கி விடுவது வெற்றியின் முதல் படி...

தோல்விகளை அங்கீகரிக்கத் தொடங்குவது, தடங்கல்களை அடையாளம் காண வழி வகுக்கும்....

தோல்விகளை கொண்டாடுவது, எடுத்த முயற்சிகளை பாராட்டுவது மிக முக்கியம்...


குடும்பத்தில் உள்ளவர்களின் தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் பண்பு, தோல்வியடைந்தாலும் அன்பு மாறாமல் இருப்பது, தோல்வியடைந்தவர்களின் மனநிலையை சம நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது... வீட்டிற்குள் தமக்கான அங்கீகாரம் கிடைத்து விட்டால், கோயில், குளம், மூட நம்பிக்கைகள், போலிச்சாமியார் என்று எதையாவது அணுக வேண்டிய அவசியம் இருப்பது இல்லை...

சிறு வயது முதலே குழந்தைகளுக்கு தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.

தோல்வியடைந்தால் அதைப் பற்றி குழந்தைகள் விரிவாக பேசுவதற்கு இடம் கொடுக்க வேண்டும்.
நமது மக்கள் புலம்பல் என்று அதற்கு சொல்வது சரியல்ல. ஏன் தோல்வி அடைந்தேன்? என்ன மாதிரியான முயற்சிகளை மேற்கொண்டேன்? கவனக்குறைவா, சரியாக திட்டமிட தெரியவில்லையா? என பல்வேறு கோணங்களில் சிறு வயதில் (பள்ளி வயதில்) பேச, தோல்விகளை பற்றி ஆராய்ச்சி செய்ய இடம் கொடுக்க வேண்டும்.

அதற்கு அனுசரணையான முறையில் கேட்கும் திறன் (Listening to the core) உள்ளவர்களாக பெற்றோரும் ஆசிரியரும் இருத்தல் வேண்டும்.

பள்ளிப் பாடத்தில் தோல்வியடைந்தால் மிக அதிகமாக கோபமடையும் பெற்றோர், தோல்வி குறித்த அச்சத்தையே குழந்தை மனதில் விதைக்கிறார்கள்.

தோல்விகளைக் காணாத பிள்ளைகள், எப்படியாவது தோல்வியின் அருகில் சென்று விடாதவாறு , எல்லாப் பயிற்சிகளும் கவனிப்புகளும், கட்டுப்பாடுகளும் அளிக்கப் பட்டு, தோல்விகளின் வாடை தெரியாமல் வளர்க்கப் படும் குழந்தைகள் மனதளவில் வலிமையற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வெளி உலகில் அடியெடுத்து வைக்கும் போது,  "தோல்விகளை பாரமாக அல்லது கீழ்த்தரமாக" எண்ணும் மனப்பாண்மையிலே தம் வாழ்க்கையை நோக்குகிறார்கள்...
இப்படி பட்டோர் தம் மனப்பான்மையை தம் சுற்றத்தாரிடமும், பிள்ளைகளிடமும் கட்டாயமாக வெளிப்படுத்துகிறார்கள்.
எப்பாடு பட்டாவது, எதைச் செய்தாவது தோல்வியை தவிர்க்க தவறான வழிகளில் கூட ஈடுபடத் துவங்கி விடுகிறார்கள்.


தோல்விகளைப் பற்றி பேசும் போது தான், அதே போல் தோல்விடைந்தவர்களும் இவ்வுலகில் உள்ளதை உணரத் துவங்குகிறோம். நமக்கு மட்டும் ஏன் எல்லாமே தோல்வியாக முடிகிறது என்ற கேள்வி முதலில் மறையத்துவங்குகிறது. பின், நம்மைப் போன்ற வலிகளை கடந்தவர்களை அடையாளம் காண முடிகிறது. நம்மை விடவும் அதிகமான தோல்விகளையடைந்தவர்கள் எப்படி கடந்து வந்தார்கள் என்பதை அறிய முடிகிறது.

தோல்வியும் ஒரு அனுபவம், அதுவே வாழ்க்கையின் அடையாளம் அல்ல என்பதை ஏற்றுக் கொண்ட பின் இனி நம்மை நாமே அங்கீகரிக்கத் துவங்குகிறோம்.

நமக்கான ஆரோக்கியமான பயிற்சிகளை, முயற்சிகளை மேற் கொள்ளத் துவங்கி விடுகிறோம்.
மற்றவர்களிடம் தேவையான உதவிகளைக் கேட்கத் துவங்குகிறோம். திரும்பத் திரும்பத் தோல்விடையும் போது, தகுந்த நேரத்தில் உதவி கேட்க வேண்டும், தகவல்களை தகுந்த நேரத்தில் தேடி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை உணரத் துவங்குகிறோம்.

நம்மை நாமே பார்த்துக் கொள்ளத் துவங்கி விடுகிறோம்.

இதை சிறு வயது முதலே குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து விட்டால், மன உறுதியும் உற்சாகமும் இயற்கையாய் குழந்தகளுக்கு வளரும்.





Thursday, November 1, 2018

Inspiring insights....

இதற்கு முன் மேற்கத்திய பாடல்கள் பற்றி தெரியாது. முதன்முதலில் கேட்டவைகளில் இந்த பாடலும் ஒன்று... கேட்டவுடன் மனதில் ஒட்டிக் கொள்ளும் இசை.
பாடல் வரிகளும் ஓரளவு புரியும்..ஆனால் பாடல் வரிகளை ஓரிரு முறை பார்த்து பழகி விட்டால் பாடல்களை இன்னும் இரசிக்க முடியும்...

ஒரு உதாரணம்:

Imagine Dragons

~~~~~Demons~~~~~
Your eyes, they shine so bright
I want to save their light
I can't escape this now
Unless you show me how
~~~~~~~~~~~~~~~~

காணொளி: Lyrics and Video:

https://www.youtube.com/watch?v=mWRsgZuwf_8



இசைக்குழுவினற்கு நன்றி.

Empaths

முகநூலில் மூலம் தெரிந்து கொண்டவை வரிசையில் முதலாவதாக...


Life is challenging for the empath...

Scientists discovered distinct brain cells that respond when a person feels empathy. An empath’s brain is predisposed to respond this way.

Its science!

When empaths expose themselves to different emotions, they eventually need to get some time alone and recharge.

Its natural!




https://understandingcompassion.com/articles/every-empath-will-try-to-hide-these-10-things-from-you/?utm_source=pf&fbclid=IwAR0W8nWEHedKQZNxXcGsvTsSITxHtzZatXEd9x_AzwDJhe9bImWXiSQCjd0

முகநூலுக்கு நன்றி

Poems from Tamil Literature: திருக்குறள் - பற்றற்றெம் என்பர்

Poems from Tamil Literature: திருக்குறள் - பற்றற்றெம் என்பர் : திருக்குறள் - பற்றற்றெம் என்பர் செல்வத்தை ஈட்டுவது, சேமிப்பது, செலவழிப்பது என...